மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 23 May 2022

சுற்றுச்சூழல் தினங்கள்! பகுதி __1

பிப்ரவரி - 2 
ஈர நிலங்களின் தினம் 
(INTERNATIONAL DAY OF WET LANDS)

       கரீபிய கடலின் ராம்சா பகுதியில் ஈர நிலங்களைப் பாதுகாப்பது குறித்து ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது! ஈர நிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம். இதை நினைவு கூறும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2 அன்று சர்வதேச ஈர நிலங்களின் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 


    ஈர நிலங்கள் உயிரினங்களின் பல்வகைத் தன்மையைக் கொண்டிருப்பதால் அவை "நகரங்களின் பச்சை நுரையீரல்கள்'' என அழைக்கப்படுகின்றன. சேற்று நிலம் என்றும், சகதி என்றும் மக்களால் அழைக்கப்பட்டு, கழிவுகள் கொட்டும் இடமாக மாறிக் கொண்டிருக்கும் இடங்களே ஈர நிலங்கள். அதாவது குளம், குட்டை, ஏரி போன்றவை. 


பிப்ரவரி 28  தேசிய அறிவியல் தினம் 

(NATIONAL SCIENCE DAY) 
         
அறிவியல் மேதைகளைக் கொண்டாடவும், மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும் 1987 ஆம் ஆண்டை தேசிய அறிவியல் தினமாக இந்திய அரசு அறிவித்தது. இயற்பியல் மேதை சர்.சி.வி.ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகப் பொருத்தமானது.

        நாகரீக சமூகத்தின் அடிப்படையான அறிவியலின் சிறப்பை இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டுவதும், பல புதிய அறிவியல் சிந்தனைகளைக் கண்டறிவதும், அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக் கடன் என்பதை உணரச் செய்வதே இந்நாளின் நோக்கம்.


Pages