மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 23 May 2022

சுற்றுச்சூழல் தினங்கள்! பகுதி __2


மார்ச் 3 உலக வனவிலங்குகள் தினம்
(WORLD WILD LIFE DAY)

     பலவகைப்பட்ட அழகிய காட்டுயிர்களை நினைவு கூறும் தினம். காட்டுவளங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்!


மார்ச் - 12. தேசிய ஒரு செடி நடும் தினம்.
(NATIONAL PLANT A FLOWER DAY)

       எல்லா வருடமும், மார்ச் 12 ஆம் தேதி தேசிய அளவில் ஒரு செடி நடும் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது இளவேனில் காலத்தை வரவேற்கும் விதமாக அமைகிறது.


மார்ச் 20 சிட்டுக்குருவி தினம்! 
(WORLD SPARROW DAY)

       மனித இனத்தின் அதிவேக வளர்ச்சியால் அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் தினம். 1990 ஆம் ஆண்டிலேயே உலகம் முழுவதும் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது! சிட்டுக்குருவிகள் அழிவதற்கு காரணம் நவீன விஞ்ஞான வளர்ச்சிதான். சிட்டுக்குருவிகள் எதிர் நோக்கும் பிரச்னைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் பயன்படுகிறது.

Pages