இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால்
தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம்,1935 திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது.
அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது.