மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 26 November 2018

சுற்றுச்சூழல் தினங்கள்! பகுதி __3

மார்ச் - 21உலகக் காடுகள் தினம்! 

(INTERNATIONAL DAY OF FORESTS)
    காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் 
பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் வன வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் ஏடுத்துச் சொல்லப்படுகிறது உலக நிலப்பரப்பில் 30 % அளவுக்குக் காடுகள் உள்ளன.

மார்ச் 22உலக தண்ணீர் தினம்! 
(WORLD WATER DAY)
       பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின், சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த மகாநாட்டில் உலக நீர் தினத்தை கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டது. கோடை காலம் ஆரம்பிக்கும்போதே வறட்சியும் ஆரம்பித்துவிடும் நிலையில் இன்று உலக தண்ணீர்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    பூமியில் 30 % மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 % நீர்ப்பரப்புதான். ஆனால் இன்று அந்த 30 சதவிகிதத்தில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் திறனை பூமி இழந்து வருகிறது. அதற்கு மனித இனமே முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை! 

மார்ச் 23எர்த் அவர் 
(EARTH HOUR)
வேர்ல்ட் வொயில்ட் லைஃப் ஃபண்டு ஃபார் நேச்சர் (WWFN) அமைப்பால் 2007 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. புவிவெப்பமயமாவதைக் குறைக்கும் விதமாக அந்நாளில் ஆண்டுதோறும் உலகெங்கிலும் உள்ள பிரபலமான நகரங்களின் இரவு ஒரு மணிகால அளவிற்கு தன்னார்வமாக அனைத்து ஒளிரும் விளக்குகளையும் அணைந்து விடுவது!....தற்போது 187 நாடுகளில் 3100 க்கும் அதிகமான புகழ் பெற்ற நகரங்களில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.

Pages