மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 29 November 2018

சுற்றுச்சூழல் தினங்கள்! __ பகுதி-5




மே 10உலக இடம் பெயர் பறவைகள் தினம்
(WORLD MIGRATORY BIRD DAY)
     ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பறவைகள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பலவும் அழிவின் விளிம்பில் இருப்பவையாகும்.

      இந்தப் பறவைகளின் போராட்டங்கள் மற்றும் அவற்றின் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. இந்த நாளின் முக்கிய நோக்கம் 2006 ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

மே 23ஆமை பாதுகாப்பு தினம் 
(WORLD TURTLE DAY)
      2000 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23 ஆம் தேதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆமை இனத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மானுட சமூகத்திற்கு விளக்குவதே இந்நாளின் நோக்கம். 

ஜூன் 5உலகச் சுற்றுச் சூழல் தினம் 
(WORLD ENVIRONMENT DAY)
     ஐக்கிய நாடுகள் சபையில் 1972 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நாள். இதனை ஐ.நா. சூழல் திட்டம் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. 

ஜூன் 8உலகக் கடல் தினம் 
(WORLD OCEAN DAY)
   பல்வேறு வளங்கள் தருகிறது கடல். வர்த்தகப் பாதையாகவும் விளங்குகிறது. தூய காற்று, உணவு போன்றவற்றை வழங்கும் கடல்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கின்றன. 

ஜூன் 11உலக மக்கள் தொகை தினம் 
(WORLD POPULATION DAY)
     மக்கள் பெருக்கத்தால் ஏற்படும் சிக்கல்கள், சூற்றுச் சூழல் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கம். 

ஜூன் 15உலகக் காற்று தினம்! 
(GLOBAL WIND DAY)
     பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் இது. காற்றின் மாசைக் கட்டுப்படுத்துதல். காற்றின் சக்தியை உபயோகப்படுத்திக் கொள்ளுதல், தூய காற்றுக்கான வழிகளைக் கண்டறிதல் போன்றவை இதில் அடங்கும். 

ஜூலை 29சர்வதேசப் புலிகள் தினம்
(INTERNATIONAL TIGER DAY)
       ரஷ்யாவில் 2010 ஆம் வருடம் நடைபெற்ற மாநாட்டில் புலிகள் வாழும் 13 நாடுகள் பங்கேற்றன. அதில் அழிந்து வரும் பட்டியலில் இருக்கும் புலிகள் இனத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் புலிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கிலும் இந்த நாள் சர்வதேச புலிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.


    கடந்து நூறு ஆண்டிகளில் 97 சதவீதம் புலிகள் அழிந்து விட்டன! அவைகள் வாழ்விடமும் 93 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டது. வனங்களின் பாதுகாப்புக்கு புலிகள் மிக முக்கியம். 

>>>●சுற்றுச்சூழல் தினங்கள்! பகுதி-4<<<□

Pages