இளைஞன் ஒருவர் தெருவில் நடந்து சென்றபோது, முதியவர் ஒருவர் பிச்சை எடுப்பதைக் கண்டார்.
அந்த முதியவர் அருகில் ஒரு காலியான கிண்ணத்தை வைத்திருந்தார். அந்தப் பாத்திரத்தின் அருகில் அட்டைப்பலகை ஒன்று இருந்தது.
அந்த அட்டைப்பலகையில் 'நான் கண் பார்வையற்றவன் - தயவு செய்து எனக்கு உதவுங்கள்..!!" என்று எழுதப்பட்டிருந்தது.
நிறைய பேர் அந்த வயதான மனிதனை கடந்து சென்றதையும், அவருக்கு யாரும் பணம் கொடுத்து உதவவில்லை என்பதையும் அந்த இளைஞன் கவனித்தார்.
அந்த இளைஞன் முதியவரிடம் சென்று அவர் வைத்திருந்த அட்டைப்பலகையை கையில் எடுத்தான். பையில் இருந்து ஒரு பேனாவை வெளியே எடுத்து அட்டைப்பலகையில் எழுதிவிட்டு அவனது வழியில் சென்றார்.
யாரோ ஒருவர், அட்டையில் ஏதோ ஒன்றை எழுதுவதாக அந்த முதியவர் கவனித்தார் ஆனால் அவர் எதையும் சொல்லவில்லை.
சில நிமிடங்களிலேயே கிண்ணத்தில் பணம் நிரம்பியதை அவர் உணர்ந்தார். முதியவர் ஒரு நபரை நிறுத்தி அந்த அட்டையில் எழுதப்பட்டிருந்ததை அவரிடம் கேட்டார்.
அந்த இளைஞன் அட்டையில் எழுதியது என்னவென்றால், - 'இது ஒரு அழகான நாள். நீங்கள் அதை பார்க்க முடியும். என்னால் இதை பார்க்க முடியாது.." என்பதுதான்.
நீதி : நாம் பேசும் வார்த்தைகள் மற்றும் மொழிகள் மற்றவர்களின் மீது நேர்மறை அல்லது எதிர்மறை விளைவை உருவாக்க முடியும். ஆனால் நாம் சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தால், நாம் உண்மையிலேயே நல்ல முறையில் மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பார்வைகளை மாற்றலாம்.