மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 25 November 2018

இரவில் தூக்கமில்லையா.. இந்த டீயைக் குடிங்க..



      நமது உடம்பிற்கு போதுமான ஓய்வு, நாம் இரவில் சரியாக தூங்வதால் மட்டுமே கிடைக்கிறது. முறையாக தூக்கம் இல்லாத போது பலவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே, இரவு நேரத்தில் படுத்ததும் தூக்கம் வருவதற்கு இந்த டீயை குடித்தால் நல்ல பயன் கிடைக்கும்.



வாழைப்பழ டீ தயாரிக்க தேவையானவை:



 ஒரு நல்ல நாட்டு வாழைப்பழம், ஆறு கிளாஸ் தண்ணீர் மற்றும் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும்போதே அதில் வாழைப்பழத்தை போட்டு வைக்கவும், இந்த தண்ணீரில் வாழைப்பழத்தை 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் இந்த பழத்தை எடுத்துவிட்டு தண்ணீரை வடிகட்டவும். இதில் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும்.



பயன்கள்:

* தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது.

* மனச்சோர்வை நீக்குகிறது. 


* எலும்புகளை இரும்பு போல உறுதியாக்குகிறது. 



* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 



* எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

Pages