1. என்னிடம் இரண்டு காசுகள் (coins) இருக்கின்றன. ஒன்று ஐந்து ரூபாய் காசு. இன்னொரு காயின் செல்லாத காயின் இல்லை. ஆனால் என்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருக்கிறது. அப்படியானால் இன்னொரு காயின் மதிப்பு என்ன?
விடை :
இன்னொரு காயின் வெளிநாட்டு காசு. எனவே ரூபாய் என்று பார்த்தால் என்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருக்கிறது
2. ஒரு சாலையில் வேகக் கட்டுப்பாடு அறுபது என்று இருக்கிறது. ஒருவர் எண்பது கிலோமீட்டர் வேகத்திலும், இன்னொருவர் நூறு கிலோ மீட்டர் வேகத்திலும் சென்றார்கள். என்றாலும் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவருக்கு மட்டுமே அபராதம் போடப்பட்டது. ஏன்?
விடை :
எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்றவரை நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்று பிடித்தவர் போலீஸ். எனவே முன்னவர் மட்டுமே குற்றவாளி
3. என்னிடம் இரண்டு காயின் இருக்கிறது. மொத்தம் ஏழு ரூபாய் இருக்கிறது. ஆனால் என்னிடம் இருந்த ஒரு காயின் ஐந்து ரூபாய் காயின் கிடையாது. எப்படி?
விடை :
ஒரு காயின் ஐந்து ரூபாய் காயின் கிடையாது. இன்னொரு காயின் தான் ஐந்து ரூபாய். இந்த காயின் இரண்டு ரூபாய். மொத்தம் ஏழு ரூபாய்.