முற்றிலும் ஆசனங்கள்மற்றும் பிராணபயிற்சி மட்டுமே அடங்கியுள்ளது. ஹத யோகாசனத்தில் இரண்டு வடிவங்கள் உள்ளது ஒன்று உறுப்புகளை பயன்படுத்திசெய்யப்படும் அஷ்டாங்க யோகாசனம் மாற்றொன்று முத்திரைகளை பயன்படுத்துவது.
யோகப்பயிற்சி செய்வதற்கான முக்கிய காரணங்கள் உடலை கட்டுப்பாடுடன்வைத்திருப்பதோடு மட்டும் அல்லாமல் மனதையும் ஒருநிலைப்படுத்தி முக்தி நிலை அடைவதற்கு தான்.
ஹத யோகாசனம் மற்ற யோக முறைகளில் இருந்து மாறுபடும். ஹத யோகாசனம் உடலையும் மனதையும் தூய்மை படுத்துவதற்காக பயன்படும்.
சில யோக முறைகள் ஆசனங்களை மட்டுமே கொண்டுள்ளது ஆனால் ஹத யோகாசனம் ஆசனங்களுடன் சேர்த்து தியானத்தையும்உள்ளடக்கியது. ஹத யோகாவில் பிராண பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்று.