Mother′s demand at Old Age Home..!!
After father′s death, son left his mother at a old age home. And he used to visit her sometimes. One day he received a phone call from old age home. On other side of call was his mother. In very serious tone she said, ′Please come to visit me.′
Son went and saw that condition of his mother was very critical. He sat close to her mother and said, ′Mom what should I do for you?′ Mother replied, ′Please install fans in old age home as there are no fan here. Also, put a fridge, because many time I had to sleep without food, I had to store fruits here, so I need a fridge here.′
Son was surprised to listen to this and questioned, ′Mom while you were here you never complained and now when you have only few hours left why are telling me all this??′ Mother replied, ′Son, I managed with heat and hunger and pain but when you get old and your children send you here in old age home. I am afraid you will not be able to manage..′
Moral : Our parents love us and they never stop caring about us even if We don′t care enough about them.
தந்தையின் மரணத்திற்குப் பின் மகன் தனது வயதான தாயை காப்பகத்தில் விட்டு விட்டு சில நேரங்களில் வந்து தனது தாயை சந்தித்து வருவான். ஒரு நாள் காப்பகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று அவனுக்கு வந்தது. அழைப்பின் மறுபக்கத்தில் அவனது தாய் மிகவும் மோசமான குரலில் 'தயவுசெய்து என்னை வந்து பார்" என்றாள்.
மகன் தாயின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை கண்டு, அவனுடைய அம்மாவிற்கு அருகில் உட்கார்ந்து, 'அம்மா நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?" என்றான்.
அதற்கு அந்த தாய் 'காப்பகத்தில் மின்விசிறியே இல்லை அதனால் முதலில் இங்கு மின்விசிறியை வைத்துவிடு. மேலும், ஒரு குளிர்சாதனப்பெட்டியை வைத்துவிடு, ஏனென்றால் நான் பலமுறை உணவு இல்லாமல் தூங்க வேண்டியிருந்தது, அதனால் பழங்களை இங்கே சேமித்து வைக்க இங்கே குளிர்சாதனப்பெட்டி ஒன்று தேவைப்படுகிறது" என்றாள் தாய்.
இந்த கேள்வியை கேட்டு மகன் மிகவும் ஆச்சரியப்பட்டு, 'அம்மா நீங்கள் இங்கே இத்தனை நாட்கள் இருந்தபோது இதைப்பற்றி எதுவும் புகார் செய்யவில்லை, ஆனால் இப்போது உங்களுக்கான சில மணிநேரம் மட்டுமே இருக்கும் போது ஏன் இதை எல்லாம் சொல்கிறீர்கள்?" என்றான் மகன்.
அதற்கு அவனது அம்மா 'மகனே, என்னால் பசி, வெப்பம் மற்றும் வேதனைகளை சமாளிக்க முடிந்தது, ஆனால் உனது பிள்ளைகள் உன்னை வயதான காலத்தில் இங்கே அனுப்பினால் உன்னால் இந்த நிலைமையை சமாளிக்க முடியாது என்பதால் தான் நான் பயப்படுகிறேன்.." என்றாள்.
நீதி : நம் பெற்றோர்கள் நம்மை நேசிக்கிறார்கள், அவர்களைப் பற்றி நாம் கவலைப்படாவிட்டாலும் கூட அவர்கள் நம்மை நேசிப்பதை நிறுத்த மாட்டார்கள்.