Crow Question to Other Birds..!!
Parrot replied, ′I lived happily until I saw a peacock. I have only two colors but peacock has multiple colors.′ Now the crow visited the peacock in zoo, there are hundred of peoples gathered to see the peacock. After people left, crow approached the peacock and said, ′Dear peacock, you are so beautiful. Everyday thousands of people come to see you but when anyone see me they just want me to move away. I think you are the happiest bird on the Earth.′
Peacock replied sadly, ′I always thought that I was the most beautiful and happiest bird on Earth but because of this beauty, I am entrapped in this cage and sometimes I would think, if I were a crow I would happily roam everywhere.′
Moral : We have to learn to live with what we have.
நகரத்தில் காகம் ஒன்று வாழ்ந்து வந்தது. எப்போழுதும் எல்லா இடங்களிலும் சுற்றி பார்த்துக் கொண்டே இருக்கும். ஒரு நாள் காகம் அன்னப்பறவை மிகவும் வெள்ளையாக இருப்பதை கண்டு, தான் மிகவும் கருப்பாக இருக்கிறோம் என்று தனக்குள் நினைத்துக் கொண்டது. அன்னப்பறவை தான் உலகிலே மிகவும் மகிழ்ச்சியான பறவையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததுக் கொண்டு அன்னப்பறவையிடம் சென்று, 'நீ தான் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான பறவை இருக்க வேண்டும். ஏனென்றால் நீ மிகவும் வெள்ளையாக இருக்கிறாய், ஆனால் நானோ கருப்பாக இருக்கிறேன் அதனால் தான் யாருக்கும் என்னை பிடிக்கவில்லை" என்றது.
அன்னப்பறவை அதற்கு, 'உண்மையில், நான் ஒரு கிளியை பார்ப்பதற்கு முன்னர் வரை நான் தான் உலகத்தில் மிக மகிழ்ச்சியான பறவை என்று நினைத்தேன், ஆனால் கிளியை பார்த்த பிறகு, அதற்கு இரண்டு நிறங்கள் உள்ளதை கண்டு, கிளிதான் இந்த உலகத்திலே மிகவும் மகிழ்ச்சியான பறவை என்று நான் நினைக்கிறேன்". என்றது அன்னப்பறவை.
இப்போது காகம் கிளியிடம் சென்று எல்லாவற்றையும் விளக்கியது. உடனே அந்த கிளி, 'நான் ஒரு மயிலை பார்க்கும் வரை நான் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். எனக்கோ இரண்டு வண்ணங்கள் மட்டுமே உள்ளது, ஆனால் மயிலுக்கோ பல வண்ணங்கள் உள்ளது" என்றது.
இப்போது அந்த காகம் விலங்கியல் பூங்காவிற்குள் உள்ள மயிலைப் பார்க்க சென்றது, அந்த மயிலைப் பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் கூடினார்கள். அவர்கள் எல்லாம் சென்ற பிறகு, காகம் மயிலிடம் சென்று, 'அன்பு மயிலே, நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்களைக் காண தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள், ஆனால் யாராவது என்னைப் பார்த்தால் உடனே அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். நீங்கள் தான் இந்த உலகிலே மிகவும் மகிழ்ச்சியான பறவை என்று நான் நினைக்கிறேன்" என்றது காகம்.
இதைக் கேட்ட மயில் சோகத்துடன் 'எப்போதும் நான் தான் இந்த பூமியில் மிக அழகான மற்றும் மகிழ்ச்சியான பறவை என்று நினைத்தேன், ஆனால் இந்த அழகினால் நான் இந்த கூண்டில் அடைக்கப்பட்டுள்ளேன், சில நேரங்களில் நான் ஒரு காகமாக இருந்திருந்தால் நான் மகிழ்ச்சியுடன் எல்லா இடங்களிலும் சுற்றிக் கொண்டிருந்திருப்பேன் என்று நினைப்பேன்" என்றது மயில்.
நீதி : நம்மிடம் இருப்பதை வைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.