மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 23 June 2022

நாமும் அவ்வாறே செய்யக்கூடாது

Be good to your Enemies..!
 

         Long ago, there lived a little boy named Raju in a vatican city. Raju was so obedient to his parents and kind to everyone. Raju had a classmate named Kavin. Unlike Raju, he used to misbehave with his parents and others.


       On his eighth birthday, Raju got a nice pen as a gift from his parents. He brought it to school. When Kavin saw it, he asked Raju, ′Hey, where did you get that?′ ′My parents gave it as a birthday gift to me′ replied Raju.


      After hearing this, Kavin was too jealous. He took out the pen from Raju′s bag when no one is in the class. When Raju came back to class and could not find his pen, he informed his teacher about it. And the teacher ordered to search the bag of every children inside the class. The missing pen was soon found out of Kavin′s bag and the teacher asked the boy, ′Now Kavin, what do you have to say about it?′ Kavin′s eye was filled with tears. He had nothing to say.


       When Raju saw Kavin′s crying, he took pity on the boy. He requested his teacher not to take any action against Kavin. Now Kavin asked for forgiveness to teacher and Raju. From that day, they became friends and Kavin gradually changed himself to be as good as Raju. Everyone began to love Kavin and Raju was proud of his new friend.


Moral : Do not harm someone even if he harms you. Be good to all.



       நீண்ட காலத்திற்கு முன்பு வத்திக்கான் நகரில் ராஜு என்ற ஒரு சிறுவன் வசித்து வந்தான். ராஜு அவனுடைய பெற்றோருக்கு கீழ்ப்படிந்து, எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பான். ராஜூவுக்கு கவீன் என்ற ஒரு வகுப்புத் தோழன் இருந்தான். ஆனால் அவனோ ராஜூவைப் போல் அல்லாமல், பெற்றோர்களையும் மற்றவர்களையும் மதிக்காமல் இருப்பான்.


       ராஜூவின் எட்டாவது பிறந்த நாளன்று, அவனுடைய பெற்றோர் அவனுக்கு ஒரு பேனாவை பரிசாக அளித்தார்கள். ராஜூ தனக்கு பரிசாக கிடைத்த பேனாவை பள்ளிக்கு எடுத்துச் சென்றான். கவீன் அதை பார்த்த போது, ராஜூவிடம், 'ஏய், ராஜூ நீ இந்த பேனாவை எங்கு வாங்கினாய்?" என்று கேட்க, ராஜூ 'என் பெற்றோர் பிறந்த நாள் பரிசாக எனக்கு இதை கொடுத்தார்கள்" என்று பதிலளித்தான். இதை கேட்டபின், கவீன் பொறாமை கொண்டு, யாரும் இல்லாத நேரத்தில் ராஜூவின் பையில் இருந்து பேனாவை எடுத்துக் கொண்டான்.


      ராஜூ மீண்டும் வகுப்பிற்கு வந்து, தன்னுடைய பேனா காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்து, வகுப்பு ஆசிரியரிடம் முறையிட, ஆசிரியர் வகுப்பிற்குள் உள்ள அனைத்து குழந்தைகளின் பையையும் சோதனையிட உத்தரவிட்டார். காணாமல் போன பேனா கவீன் பையில் இருந்ததை பார்த்து கோபமடைந்த ஆசிரியர் கவீனை பார்த்து 'இதற்கு நீ என்ன கூறுகிறாய் கவீன்" என்று கேட்க, கவீனின் கண்கள் கண்ணீரால் நிரம்பி, எதுவும் கூறமுடியாமல் அப்படியே நின்றான்.


       கவீன் அழுவதை பார்த்த ராஜூ, கவீன் மீது பரிதாபம் கொண்டு, கவீனுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம் என்று தனது வகுப்பு ஆசிரியரைக் கேட்டுக் கொண்டான் ராஜூ.


        கவீன் வகுப்பு ஆசிரியரிடமும் ராஜூவிடம் மன்னிப்பு கேட்ட, அந்த நாள் முதல், அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆனார்கள், படிப்படியாக கவீன் தன்னை ராஜூவை போல ஒரு நல்ல மனிதனாக மாற்றிக் கொண்டான். இப்போது எல்லோரும் கவீனை நேசிக்க ஆரம்பித்தனர், இதை பார்த்த ராஜூ தனது புதிய நண்பனை நினைத்து பெருமை அடைந்தான்.


நீதி : யாராவது நமக்கு தீங்கு விளைவித்தால், நாமும் அவ்வாறே செய்யக்கூடாது. அனைவருக்கும் நல்லவனாக இருக்க வேண்டும்.

Pages