மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Sunday, 25 November 2018

பொன்மொழிகள்..


* குறைவான சொற்களால் கருத்துக்களைச் சொல்கிற பேச்சே வெற்றிபெறும்!  - எமர்ஸன்.

* விஷயம் இல்லாதவர்களே சத்தம்போட்டுப் பேசுவர்! 
- சீஸரோ
* கருத்துக்களை மதிப்பிட்டுப் பேசாத பேச்சாளர் கடிவாளமில்லாத குதிரை! 
- தியேஃபிரேஸ்டஸ்
* ஆயிரம் சொற்கள் சேர்ந்தாலும் ஒரு செயலைப் போல் மனங்களில் பதிவதில்லை. 
- இப்ஸன்
* பொருளில்லாத சொற்கள் கருத்தில்லாத செயல்களாகும்....சொற்கள் செயல்களின் சிறகுகள்! 
- வேட்டர்
* சுருங்கச் சொல்வதே பேச்சுத் திறனின் உயிர்நாடி! 
- ஷேக்ஸ்பியர்
* கடுமையான சொற்கள்,....கசப்பான சொற்கள்,....பலவீனமான கொள்கைகளின் அறிகுறி! 
- விக்டர் ஹ்யூகோ
* உணர்ச்சி தணிந்து வரும் சந்தர்ப்பம் பார்த்து நல்ல உபதேசங்களைச் சொல்ல வேண்டும். 
- ஷேக்ஸ்பியர்
* முறையாகக் கருத்துக்களைச் சொல்பவரின் ஏவலைக் கேட்டு இந்த உலகம் நடக்கும் 
- திருவள்ளுவர்

Pages