1. மரத்திற்கு மரம் தாவுவான்; குரங்கு அல்ல
பட்டை தீட்டியிருப்பான்; சாமியார் அல்ல - அவன் யார்?
2. கறுத்த ரோஜா மொட்டு, கனத்த மேகம் கண்டு
கணத்தில் இதழ் விரித்திடும், காத்திடும் பின்
சாய்ந்திடும் - அது என்ன?
3. நெஞ்சிலே ஒரு கல், வீட்டிலே ஒரு கல், வானத்திலே ஒரு கல் - அவை எவை?
4. பார்த்தவர் இருவர், எடுத்தவர் ஐவர், உண்டவரோ ஒருவர் - அவர்கள் யார்?
5. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை
கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை
வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை - அவன் யார்?
6. ஊளையிட்டாலும் ஊரைச் சுமந்து செல்வான் - அவன் யார்?
7. கல்லிலே காய்க்கும் பூ;
காய்ந்தால் மலரும் பூ:
பூவிலே இது வெள்ளைப்பூ. - என்ன பூ?
8. எண்ணெய் இல்லை; திரியும் இல்லை
ஏற்றி வைக்க ஆளும் இல்லை
ஆனாலும் தெரியுது வெளிச்சம். - அது எது?
9. கருப்பு நிறமுடையவன்
கபடம் அதிகம் கொண்டவன்
கூவி அழைத்தால் வந்திடுவான்
கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் - அவன் யார்?
10. அரிசி போல் பூ பூக்கும்.
அம்மாடி எனச் சொல்லும் காய் காய்க்கும் - அது என்ன?
>>>● விடைகாண இங்கே கிளிக் செய்யவும் <<<
●