மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 2 December 2018

நினைவாற்றலை அதிகரிக்கும் ஞானமுத்திரை


ஞான முத்திரை செய்முறை :
            ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கையை பூமியை நோக்கி கவிழ்த்து வைக்க வேண்டும். நிமிர்ந்து இருந்தால் அது சின் முத்திரை. 


பலன்கள்: 
●கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் நாளமில்லா (Endocrine) சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரலைத் தொடும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். 

●மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும், மூளை செயல்பாடு, நினைவாற்றல் அதிகரிக்கும். 

●அறிவையும் ஒருமுனை -ப்படுதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோக முத்திரை இது. பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டும். ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.

Pages