மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 10 December 2018

இன்று உலக மனித உரிமைகள் நாள் _டிசம்பர் -10

        
       1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.


     ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

முதன்முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்: 10-12-1901


     இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசான நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதன்முதலாக வழங்கப்பட்ட நாள். இந்த விருது இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895-ல் தொடங்கப்பட்டது. ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு இதுவாகும்.

இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-


* 1878- சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநரும், இந்திய விடுதலை போராட்ட வீரருமான ராஜாஜி பிறந்தநாள்.

* 1902 - எகிப்தில் நைல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அஸ்வான் அணை திறக்கப்பட்டது.

* 1902 - தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.

* 1906 - அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

* 2001 - இந்தி நடிகர் அசோக் குமார் மறைந்த தினம்

Pages