மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 11 December 2018

இந்தியாவில் காற்று மாசு: 12.4 லட்சம் பேர் பலி


   இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டில் 12.4 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 

    இந்திய மருத்துவ ஆய்வு கெளன்சில், பப்ளிக் ஹெல்த் பெளண்டேஷன் ஆஃப் இந்தியா உள்பட பல நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வுகளின் முடிவில், இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள்தொகையில் 77 சதவீதம் பேர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இந்தியாவில் 8 பேரில் ஒருவர், பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்.


    டில்லி, ஹரியாணா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் நாட்டிலேயே அதிக அளவு பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்தியாவில் காற்று மாசு காரணமாக 26 சதவீதம் பேர் இளமையிலேயே உயிரிழக்கும் அபாய நிலை உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Pages