ஆங்கில பாடத்தில் உள்ள கடின சொற்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள, மாவட்டம் முழுவதும் 1,383 தொடக்கப் பள்ளிகளுக்கு, ஆங்கிலம் - தமிழ் அகராதி வழங்கப்பட உள்ளது.
மூன்று பகுதியாக உள்ள அகராதி, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒன்று வழங்கப்படும். மாணவர்கள், ஆங்கில பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை இந்த அகராதிகள் மூலம் தீர்க்கலாம்.குறிப்பாக, மாணவர்களின் பாடத்தில் உள்ள கடின சொற்களுக்கு தமிழில் அர்த்தத்துடன் கூடிய படங்களும் இடம்பெற்றிருக்கும் என, கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.