ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஓர்வில் ரைட், வில்பர் ரைட் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் ஆவர்.
இவர்கள் முதன்முதலாக 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன்முதலாக பூமிக்கு மேல் 12 வினாடிகளில் 120 அடி தூரம் பறந்து சாதனை படைத்தனர். விமானம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இருவரும் திருமணமே செய்து கொள்ளவில்லை. வில்பர் ரைட் 1912-ம் ஆண்டிலும், ஆர்வில் ரைட் 1948-ம் ஆண்டும் மரணமடைந்தனர். இவர்களே விமானத்தை கண்டறிய முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள். இவர்கள் பறந்த அந்த தினத்தை ரைட் சகோதரர்கள் நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகின்றனர்.
பிற நிகழ்வுகள்:
* 1819 - சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தான்.
* 1834 - அயர்லாந்தில் முதலாவது ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் வடக்கு போர்ணியோவில் இறங்கினர்.
* 1947 - இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைக்கப்பட்டது.
* 1961 - கோவாவை இந்தியா, போர்த்துக்கலிடம் இருந்து கைப்பற்றியது.
* 1970 - போலந்தில் கிதீனியா நகரில் ரெயிலில் இருந்து இறங்கிய தொழிலாளர்களை நோக்கி சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.
* 1973 - ரோம் நகர விமான நிலையத்தை பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்கியதில் 30 பயணிகள் கொல்லப்பட்டனர்.
* 1983 - லண்டனில் ஹரட்ஸ் பல்பொருள் அங்காடியில் குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
* 1986 - போதைப் பொருள் வர்த்தகத்துக்கெதிராகக் குரல் கொடுத்த கொலம்பியாவின் பத்திரிகையாளர் கில்லெர்மோ இசாசா சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1989 - 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.