கேம்பிரிட்ஜ்:
இந்த வார்த்தைக்கான அர்த்தம் இதுதான் - செல்போன் கையில் இல்லாமல் போனாலோ அல்லது செல்போனில் சார்ஜ் தீர்ந்து விட்டாலோ அல்லது செல்போனை பயன்படுத்த முடியாமல் அது ஸடக் ஆகி விட்டாலோ அல்லது சிக்னல் கிடைக்காவிட்டாலோ வரும் பயம்தான் 'Nomophobia'.
Nomophobia.. No Mobile phone Phobia.. இதுதான் இந்த வார்த்தையின் விரிவாக்கம். கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி தனது பிளாக் வாசகர்களிடமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தது.
நோ மொபைல் போன் போபியா
அதன் இறுதியில் பல வார்த்தைகளைப் பரிசீலித்து அதிக ஆதரவைப் பெற்ற 'Nomophobia' வார்த்தையை இந்த ஆண்டின் வார்த்தையாக கேம்பிரிட்ஜ் தேர்வு செய்துள்ளது.