மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 5 December 2018

சுறுசுறுப்பை தரும் சூர்ய முத்திரை

சூர்ய முத்திரை செய்முறை

      மோதிர விரலை வளைத்து நுனியால் கட்டை விரலைத் தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை தொடவேண்டும். இதை பத்மாசனத்தில் அமர்ந்து இரண்டு கைகளாலும் செய்ய வேண்டும். சூரியனின் ஆற்றல் திறனை அனுசரிப்பதே சூரிய முத்திரையின் அடிப்படை என்பதால் விடியற்காலையில் செய்ய வேண்டும்.

பலன்கள்
      தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி செய்யலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, செரிமானமின்மை போன்ற குறைபாடுகளை களைய உதவும். சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். உடல் எடையை குறைக்க உதவும்.

Pages