இன்றைய பொன்மொழி
'நடக்கும் கால்களில் எவ்வளவு வித்தியாசம்... ஒன்று முன்னால் என்றால் மற்றொன்று பின்னால். ஆனால் முன்னால் செல்லும் கால் கௌரவப்படவும் இல்லை. பின்னால் வரும் கால் அவமானப்படவும் இல்லை. அவைகளுக்கு தெரியும் நிமிடத்தில் நிலைமை மாறும் என்று. மனித வாழ்க்கைக்குக் கால்களும் பாடம் கற்றுத்தரும்."
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் டிசம்பர் 9ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஊழலானது நாடுகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தி பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்குகிறது. எனவே இதை தடுக்கும் நோக்கில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் போது இத்தினத்தை பிரகடனப்படுத்தியது.
முக்கிய நிகழ்வுகள்
கர்நாடக இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான வெ.தட்சிணாமூர்த்தி 1919ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கேரளாவில் பிறந்தார்.
1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தார்.
1868ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி வேதிப் போர்முறையின் தந்தை ஃபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) பிறந்தார்.
1937ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கலங்கரை விளக்கை உருவாக்கிய நில்ஸ் குஸ்டாப் டேலன் (Nils Gustaf Dalen) மறைந்தார்.
1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்திய சட்டசபை, ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
1971ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகள் அமைப்பு ஐ.நா.வில் இணைந்தது.