மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 7 December 2018

இப்படியும் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்.

A Powerful Story..!


       One day a father and a boy entered into a hotel. They selected their room and they moved towards their room silently. The receptionist noted the quiet manner of the guests. Later, the father and boy ate dinner in the hotel restaurant. The staff again noticed that the two guests were very quiet and that the boy seemed too sad. 


      After having their dinner, the boy went to his room and the father went to ask the receptionist to see the manager. The receptionist asked him to wait for some time. 

      When the manager appeared, he took him aside and explained that his son was very soon to undergo therapy, which would cause him to lose his hair. The father said that I would be shaving my own head too, in support of my son. And he requested two or three staffs to be shave their heads in support of my son. So my son will never feel alone. 

     The manager assured the father that he would inform all staff and that they would behave appropriately. Next day the father and son entered the restaurant. There they saw the four male restaurant staff attending to their duties, perfectly normally, all with shaved heads. 

Moral : No matter what business you are in, you can help people and you can make a difference. 



   ஒருநாள் தந்தையும் மகனும் ஓர் விடுதிக்குள் நுழைந்தனர். தங்களுக்கான அறையை தேர்ந்தெடுத்துவிட்டு அந்த அறையை நோக்கி அமைதியாக சென்றனர். வரவேற்பாளர் அவர்கள் இருவரும் அமைதியாக இருப்பதை கவனித்தார். பின்னர், தந்தையும் மகனும் விடுதியில் உள்ள உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டனர். அவர்கள் இருவரும் மிகவும் அமைதியாக இருப்பதை கவனித்த அந்த வரவேற்பாளர், பையன் மிகவும் கவலையாக இருப்பதையும் கவனித்தார். 

       இரவு உணவை உட்கொண்ட பிறகு, மகன் அறையை நோக்கி சென்று விட்டான், தந்தை வரவேற்பாளரிடம் சென்று விடுதியின் மேலாளரை சந்திக்க வேண்டும் என்று கூற, வரவேற்பாளர் சற்று நேரம் காத்திருக்கும் படி பதிலளித்தார். 

       மேலாளர் வந்தவுடன் அவரை தனியாக அழைத்துச் சென்று, என்னுடைய மகன் சிறிது நாட்களுக்குள் ஓர் சிகிச்சையை மேற்கொள்ள போகிறான், அந்த சிகிச்சையில் அவனுடைய முடியை இழந்து விடுவான். அவனுக்கு ஆதரவாக என்னுடைய தலையை மொட்டை அடித்து கொண்டேன். உங்கள் விடுதியில் உள்ள இரண்டு அல்லது மூன்று ஊழியர்களை என்னுடைய மகனுக்கு ஆதரவாக தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டுமென மேலாளரிடம் தந்தை கேட்டுக்கொண்டார். அதனால் என் மகன் தனிமையாக உணர மாட்டான் என்று கூறினார்.

        மேலாளர் தன்னுடைய எல்லா ஊழியர்களிடமும் இதை தெரிவிப்பேன் என்றும், அவர்கள் சரியான முறையில் நடந்து கொள்வார்கள் என்றும் தந்தைக்கு உறுதி அளித்தார். அடுத்த நாள் தந்தையும் மகனும் உணவகத்திற்குள் நுழைந்த போது, அங்கு நான்கு ஆண் உணவக ஊழியர்கள் தங்கள் கடமைகளை இயல்பாகவும், சரியாகவும் மொட்டை அடித்த தலையுடன் செய்து கொண்டிருந்தார்கள். 


நீதி : நீங்கள் எந்த வியாபாரத்தை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, மக்களுக்கு உதவி செய்து நீங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்.

Pages