மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 1 December 2018

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.

Two Friends and The Bear..!!

       Vijay and Raju were thick friends. On a holiday they went into a dense forest and they were enjoying the beauty of nature. Suddenly they saw a bear coming at them. They were very frightened.

      Raju who knew climbing trees ran up to a tree and climbed up quickly. He did not think of Vijay. Vijay did not know tree climbing.

      Vijay thought for a second. He had heard that animals do not prefer dead bodies. He fell into the ground and held his breath. The bear sniffed him and thought he was dead. So, the bear went away.

      Raju climbed down from the tree and asked Vijay,′What did the bear whisper into your ears?′

Vijay replied, ′The bear asked me to keep away from friends like you′ and went on his way.

MORAL : A friend in need is a friend indeed.

       விஜயும் ராஜுவும் நெருங்கிய நண்பர்கள். விடுமுறையில் அவர்கள் இருவரும் அருகில் இருந்த அடர்ந்த காட்டிற்கு சென்றனர். இருவரும் இயற்கையின் அழகை ரசித்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு கரடி அவர்களை நோக்கி வருவதை கண்டு மிகவும் பயந்துபோனார்கள்.

      ராஜூவிற்கு மரம் ஏறத் தெரியும், ஆனால் விஜய்க்கு மரம் ஏறத் தெரியாது, ராஜூ, விஜயைப் பற்றி சற்றும் யோசிக்காமல் மரத்தின் மேலே ஏறிக்கொண்டான்.

       விஜய் சற்று நேரம் யோசித்தான், விலங்குகள் சடலங்களை விரும்பாது என்பது அவனுடைய நினைவுக்கு வந்தது, உடனே தரையில் விழுந்து அவனது மூச்சை அடக்கிகொண்டான். அருகில் வந்த கரடி அவனை முகர்ந்து பார்த்து அவன் இறந்துவிட்டான் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டது.

      மரத்திலிருந்து கீழே இறங்கி ராஜூ விஜயைப் பார்த்து, 'கரடி உன் காதுகளில் என்ன இரகசியம் கூறியது?" என்று கேட்டான்.

      விஜய் அதற்கு 'கரடி உன்னைப் போன்ற நண்பர்களிடம் இருந்து என்னை விலகி இருக்கும் படி கூறியது" என்று பதிலளித்து விட்டு அவனது போக்கில் சென்று விட்டான்.

நீதி : ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.

Pages