குருவிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, கருங்குருவி, படை குருவி போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. நெல், மக்காச்சோளம், பயறு போன்ற சைவ உணவுகளையும், புழு, பூச்சி, வண்டுகள் என அசைவ உணவுகளையும் உண்ணும் குருவிகளின் அழிவிற்கு இந்த உணவுகளின் பற்றாக்குறையும் ஒரு காரணம்.
ஆனால், முன்னோரு காலத்தில் மனிதனை விட அதிக அளவில் இருந்துவந்த சிட்டு குருவிகள் எனும் சிறிய பறவை இனம், இன்று அழிவின் விழிம்பில் இருக்கும் அறிய பறவை இனமாகிவிட்டது. உலக அளவில் 80 சதவிகிதம் சிட்டுகுருவிகள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அழிந்து வரும இந்த சிட்டு குருவி இனங்களை காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்ந்துவருவதாக கூறப்படும் இந்த சிட்டுகுருவிகள் மனிதனோடு இனக்கமாக வாழும் பறவையினமாகும். உயரமான மரங்களிலும், வீடுகளின் கூரைகளிலும் இவை கூடுகட்டி வாழும்.
இந்த சிறிய குருவியினம் அழிந்து போவதற்கு பயிர்களுக்கு பயன்படுத்தபடும் பூச்சி கொல்லி மருந்துகள், அலைபேசி டவர்களின் கதிர் வீச்சுகள், அடுக்குமாடி கட்டடங்கள் என பல காரணங்கள் ஆராயப்பட்டுள்ளது.
மனிதனுக்கு சுறுசுறுப்பினை கற்றுதரும் இந்த சிட்டுகுருவிகளை பாதுகாக்கும் வகையில் மார்ச் 20-ம் தேதியினை உலக சிட்டுகுருவி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இனியாவது, சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் ஆங்காங்கே கூடுகள் அமைத்து காப்போம் எனவும், இனி வரும் தலைமுறையினரும் சிட்டு குருவிகளை காண வகை செய்வோம் என்றும் உறுதிமொழி ஏற்போம்.