நாவல் பழம்
1. நாவல் முழுத்தாவரமும் துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பொதுவாகத் துவர்ப்புச் சுவையே அதிகமாகும்.
2. நாவல் பட்டை நரம்புகளைப் பலப்படுத்தும்; தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.
3. நாவல் பழம் சிறுநீர் பெருக்கும்; பசியைத் தூண்டும்; நாக்கு மற்றும் ஈறுகளைச் சுத்தம் செய்யும், குடல், இரைப்பை, இதயத் தசைகளை வலுவாக்கும்.