விஜய் திவாஸ் தினம்
பாகிஸ்தானுடன் கடந்த 1971ஆம் ஆண்டு நிகழ்ந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது.
டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 90 ஆயிரம் வீரர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியப் படையிடம் சரணடைந்தனர். இந்த வெற்றி ஆண்டுதோறும் டிசம்பர் 16ஆம் தேதியன்று 'விஜய் திவாஸ்" என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முப்படை அதிகாரிகள் மரியாதை செலுத்துவார்கள்.

முக்கிய நிகழ்வுகள்
1946ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி தாய்லாந்து ஐ.நாவில் இணைந்தது.