A True Servant..!
A king had a large number of slaves. One of them was Karan. He was true to the king. So the king loved him greatly.
One day the king went out on a camel. Some slaves walked in front of the king. Others went behind the king. The Karan rode on a horse by the side of his king.
The King had a box. There were pearls in it. On the way the box fell down in a narrow street. It broke into pieces. The pearls rolled on the ground. The king said to his slaves. ′Go and collect all the pearls′.
The slaves ran and started to collect all the pearls. The Karan did not leave his place. He was by the side of his king. He guarded his king. He cared for the life of his king. He didn′t care about the king′s pearls.
The king observed the attitude of the karan and gave him many gifts.
Moral : Life is more valuable than pearls.
ஒரு அரசனுக்கு ஏராளமான அடிமைகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கரண், அவன் ராஜாவுக்கு மிகவும் உண்மையாக இருந்தான். அதனால் ராஜாவிற்கு அவனை ரொம்ப பிடிக்கும்.
ஒரு நாள் அரசர் ஒட்டகத்தின் மேல் ஏறிக் கொண்டு வெளியே புறப்பட்டார். சில அடிமைகள் ராஜாவிற்கு முன் நடந்து சென்றனர், மற்றவர்கள் ராஜாவுக்கு பின்னால் நடந்து வந்தனர். கரண் தனது அரசருக்கு அருகாமையிலே குதிரை மீது சவாரி செய்து வந்தான்.
அரசரிடம் ஒரு பெட்டி இருந்தது. அதில் முத்துகள் இருந்தன. அந்தப் பெட்டி வழியில் ஒரு குறுகிய தெருவில் விழுந்து துண்டு துண்டாக உடைந்து விட்டது. பெட்டிக்குள் இருந்த முத்துக்களும் வீதியில் உருண்டோடின.
முத்துக்கள் வீதியில் உறுண்டோடுவதைக் கண்ட அரசர், தன்னுடைய அடிமைகளிடம் 'எல்லா முத்துக்களையும் சேகரித்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார்.
அடிமைகள் ஓடி சென்று முத்துக்களை சேகரிக்க ஆரம்பித்தனர். ஆனால் கரண் அந்த இடத்தை விட்டு கொஞ்சம் கூட நகரவில்லை. அவர் தனது ராஜாவின் பக்கத்திலேயே இருந்து ராஜாவின் உயிரையும், ராஜாவின் வாழ்க்கையையும் பாதுகாத்து கொண்டிருந்தான். அவன் தன்னுடைய ராஜாவின் முத்துக்களைப் பற்றி கவலை கொள்ளவில்லை.
ராஜா கரணின் நடத்தையை கவனித்து அவனுக்கு பல பரிசுகளை அள்ளிக் கொடுத்தார்.
நீதி : வாழ்க்கை என்பது முத்துகளை விட விலை மதிப்பானவை.