முன்னதாக இதே ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. (FCC) வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் கிடைத்திருக்கும் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 19:5:9 ரக டிஸ்ப்ளே மற்றும் போனின் இடது புற ஒரமாக டிஸ்ப்ளேவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க வலைதளத்தில் SM-G8870 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது சாம்சங் ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (5V-2A/9V-1.67A) வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதே போன்ற வசதி சாம்சங் நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கி இருக்கிறது.
சாம்சங் மற்றும் ஹூவாய் என இரு நிறுவனங்களுக்கும் போ (BOE) எல்.சி.டி. டிஸ்ப்ளேவினை விநியோகம் செய்ய இருக்கிறது. எனினும், நோவா 4 மாடலை விட சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே தலைசிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்- அட்ரினோ 616 GPU- 6 ஜி.பி. ரேம்- 128 ஜி.பி. மெமரி- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ- டூயல் சிம் ஸ்லாட்- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7- 10 எம்.பி. 120° அல்ட்ரா வைடு பிரைமரி லென்ஸ்- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0- கைரேகை சென்சார்- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, என்.எஃப்.சி- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விவரங்கள் அடுத்த வாரம் தெரிந்து விடும்.