இரண்டு வேளையும் பல் துலக்கும் பழக்கம், பலருக்கு இல்லை.
இருவேளை பல் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படும்; ஈறு சம்பந்தமான நோய் அபாயம் குறையும். இரவில், துலக்கும் போது, கறைகள் அகன்று, ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும். நோய்களில் இருந்து தப்பலாம்.
இரவில், துலக்காவிட்டால்...
l உணவு துணுக்குகள், பல் இடுக்குகளில் தங்கி, பாக்டீரியா பெருகும்.
* காலையில், வாய் துர்நாற்றமாக இருக்கும்.
வாய் ஆரோக்கியம், இதயத்துடன் தொடர்புள்ளது; ஆரோக்கியமாக இல்லாவிட்டால், பாக்டீரியாக்கள், ரத்த நாளங்களில் நுழைந்து, தமனிகளைப் பாதிக்கும். இதய நோய் அபாயம் அதிகரிக்கும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இரவில் பல் துலக்க, 10 நிமிடம் தான் தேவை; அதனால் உண்டாகும் பலன்களை உணர்ந்து, இப்பழக்கத்தை, வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!