இன்னைக்கு உங்க வீட்ல என்ன சமையல்' என்று கேட்பதுபோல, மரம், செடி கொடிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதில்லை.
பேசுதல் எனும் உடலியக்கச் செயலுக்கும், செய்தித் தொடர்பு என்பதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது. சமீபத்தில் நடந்த ஆய்வுகளில் தாவரங்கள் வேதிப்பொருட்களை வெளியிட்டு இன்னொரு தாவரத்துக்குச் செய்திகளைத் தருகிறது எனக் கண்டுபிடித்தனர். இதை ஊடகங்கள் 'மரங்கள் பேசிக் கொள்கின்றன' என செய்தி வெளியிட்டன.
ஒரு வில்லோ (Willow Tree) மரத்தைப் பூச்சி தாக்கும்போது, அந்த மரம் எளிதில் ஆவியாகக்கூடிய கரிம உயிரிவேதிப் பொருளை உமிழும். இந்த உயிரிவேதிப் பொருள் காற்றில் கலந்து அடுத்த மரத்துக்குச் செல்லும். அந்த மரம் தம்மை ஆபத்து நெருங்குகிறது என உணர்ந்து, பூச்சித் தாக்குதலை முறியடிக்கும் உயிரிவேதிப் பொருட்களை வேகவேகமாக உற்பத்தி செய்து தன்னைக் காத்துக்கொள்ளும்.
இதேபோல பூச்சி தாக்குதல், மண்ணில் நீர்ப்பசை இன்மை போன்ற செய்திகளை, வேர்கள் மூலமாக சில தாவரங்கள் வேதிப்பொருட்களை உமிழ்ந்து தெரிவிக்கின்றன என, சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
What is your home cooking for today? '
There is a big difference between the physiological function of speech and that of communication. Recent studies have found that plants release chemicals and send messages to another plant. This was reported by the media as 'trees speak'.
When an insect attacks a willow tree, the tree emits volatile organic biochemicals. This biochemical mixes with the air and travels to the next tree. The tree realizes that danger is approaching and rapidly produces biochemicals that can repel insect attacks and defend itself.
Similarly, some studies have shown that some plants emit chemicals through their roots, such as insect attack and lack of water in the soil.