கொய்யாப் பழம்:
இப்பழத்தில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் ‘சி’ எலும்புகளுக்குப் பலத்தையும், உறுதியையும் அளிக்கிறது. மலச்சிக்கல் இருப்பவர்கள், கொய்யாப் பழத்தினைத் தொடர்ந்து சாப்பிட்டுப் பயன்பெறலாம்.
நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உடாக்கும் நச்சுக் கிருமிகள் இரத்தத்தில் கலந்தால் அவற்றை உடனேயே கொன்றுவிடும்.
மாம்பழம்:
மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது இரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்குப் பலம் கிடைக்கிறது. மாம்பழம் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது.
அன்னாசி பழம்:
அன்னாசி பழம் அதிக சூடு, சீதபேதி, வயிற்றுவலி ஏற்படுத்தும் என்பது தவறு. தலைவலி, கண் நோய்கள், காது நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபகச் சக்தி குறைவு போன்றவை சரியாகும். தேனும், அன்னாசிப்பழமும் சேர்த்து செய்யப்படும் அன்னாசிப்பழச் சர்பத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்நோய்களை விரைவில் குணமாகும்.
மஞ்சள் காமாலையை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் அன்னாசி சாற்றுக்கு உண்டு. இரத்தமிழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு, பித்தம் சம்பந்தமான கோளாறுகள், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய், இரத்தத்தை சுத்தி செய்ய, ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவது, மலக்குடலை சுத்தப்படுத்துவது, தேகத்தில் ஆரோக்கியம் காப்பது போன்றவற்றில் அன்னாசியின் பங்கு முக்கியமானது.
வாழைப்பழம்:
மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்குப் பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
பலாப்பழம்:
இதில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் இருப்பதால், இதைச் சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும், வைட்டமின் ‘ஏ’ சத்து தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்றுநோய் வராது.