மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 8 December 2018

ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்

.

● அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும் போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். அறிவால் அடையமுடியாத உயர்ந்த இடத்திற்கு நல்லமனநிலை ஒருவனை அழைத்துச் செல்லும்.

● மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது.

● ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. முழுமையான சுதந்திர உணர்வும், அன்பும் கொண்டு உங்கள் கடமைகளில் பணியாற்றுங்கள்.

● கர்மயோகம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு அவர் யார், எப்படிப்பட்டவர் என்ற சிந்தனையோ கேள்வியோ இல்லாமல் கூட அவருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது தான்.

● சிங்கங்களே! எழுந்து வாருங்கள். வீணான மயக்கங்களை உதறித்தள்ளுங்கள். நீங்கள் சுதந்திரமானவர்கள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.

 உங்களிடம் நேர்மை இருக்கிறதா? பொதுநலத்துடன் சேவை செய்கிறீர்களா? அன்பு இருக்கிறதா? இம்மூன்றும் இருந்தால் பயமே வாழ்வில் தேவையில்லை. மரணம் கூட உங்களை நெருங்க முடியாது.

● இறைநம்பிக்கையோடு செயல்படுங்கள். அவரையே எப்போதும் சார்ந்திருங்கள். உங்களை எந்தச் சக்தியும் எதிர்த்து நிற்க முடியாது.

Pages