மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 4 December 2018

மேகதாது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...


       மேகதாது கர்நாடக மாநிலத்தின் அழகிய அதே சமயம் அதிக பிரபலமில்லாத சுற்றுலா பகுதி. பெங்களூருவுக்கு மிக அருகில் இருக்கும் இந்த இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டதுதான் தாமதம் இந்திய அளவில் பேசப்படும் பெயராகிவிட்டது. 

தமிழகத்துக்கு ஆப்பு கர்நாடகம் பூரிப்பு

         ஓடும் ஆற்றில் அணையைக் கட்டினால், அணையைத் தாண்டி நீர் வர அணை நிரம்பவேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.. அணை எவ்வளவு உயரம், எத்தனை கொள்ளளவு, எப்போது நிரம்பி எப்போது தமிழகத்துக்கு தண்ணீர் வரும் என்பதே பெருமக்களின் எதிர்பார்ப்பு. எனினும் இது கர்நாடக முக்கியமாக பெங்களூர் வாசிகளுக்கு சிறந்த வரப்பிரசாதமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதையேத்தான் கர்நாடக அரசும் சொல்கிறது.

எங்குள்ளது

       ராமநகரா மாவட்டத்துக்கு உட்பட்ட கனகபுரா எனும் பகுதியில் அமைந்துள்ளது மேகதாது எனும் அழகிய சுற்றுலாத் தளம். இதன் சிறப்பே என்ன என்றால், இப்படி ஒரு அழகிய சுற்றுலாத் தளம் குறித்து உள்ளூர் மக்கள் ஒரு சிலரைத் தவிர்த்து பலருக்கு தெரியாமலிருந்ததுதான்.

        மேகதாது அல்லது மேகேதத்து என அழைக்கப்படும் இவ்விடம் சுற்றுலா தளமாக பிரபலமடைந்துள்ளது. இங்கே காவேரி நதியானது குறுகிய அழகுடன் அருவிகளும் காணப்படுகிறது. கன்னட மொழியில், மேகதாது என்பதற்கு அர்த்தமாக 'ஆடுகளின் துணிகரம்' என பொருள்தர, அர்த்தமாக ஆடானது அடுத்த கரைக்கு எளிதாக தாவக்கூடும் என சொல்லப்படுகிறது. இந்த சுற்றுலா தளத்திற்கு வருடந்தோரும் பலரும் வந்து செல்கின்றனர்.

Pages