மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 5 December 2018

அது உங்களுடைய கடமை.

A Father learns A Lesson from His Son..!


     Velan was a carpenter. His aged father, Kuppan was very weak and he could not even walk well. Velan had a son. His name is Muthu. He loved his grandfather. 

       One day Kuppan was eating his food with the earthen plate. The earthen plate fell down. The plate broke into pieces. Velan was very angry by seeing this, he used very harsh words and scolded his father. Velan′s son, Muthu, saw this and could′t speak anything.

      The next day Muthu took some of his father′s carpentry tools and a piece of wood. He worked with the tools to make a wooden plate. His father saw him working. He went to muthu and asked, ′What are you making, Muthu?′ ′I am making a wooden plate!′ replied Muthu. ′A wooden plate! for What?′ asked his father. ′I am making it for you, father. When you grow old, like my grandfather, you will need a plate for food. A plate made from earth mat break very easily. Then I may scold you severely. So, I will give you a wooden plate instead of earthen plate. It may not break so easily and I will never scold you′. The carpenter was shocked to hear this. Only now he realized his mistake. From that day, Velan treated his father with great respect.

Moral : You should honor your parents at all times. It is your duty. 

        வேலன் ஒரு தச்சர். அவரது வயதான தந்தை குப்பன், அவர் மிகவும் பலவீனமாக இருந்தார் மற்றும் அவரால் நன்றாக நடக்க கூட முடியாது. வேலனுக்கு ஒரு மகன் இருந்தான். அவனுடைய பெயர் முத்து. அவன் தனது தாத்தாவை மிகவும் நேசித்தான். 

     ஒருநாள் குப்பன் மண்ணால் செய்யப்பட்டிருந்த தட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த மண் தட்டு கீழே விழுந்து துண்டு துண்டாக உடைந்து விட்டது. இதைக் கண்ட வேலன் மிகவும் கோபமடைந்து, மிகவும் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து தன் தந்தையை திட்டினான். இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த வேலனின் மகன் முத்துவால் எதுவும் பேச முடியவில்லை. 

      அடுத்த நாள் முத்து தனது தந்தையின் தச்சு கருவிகளையும், மரத்துண்டு ஒன்றையும் எடுத்துக் கொண்டு, அவற்றை பயன்படுத்தி மரத்தட்டு ஒன்றை செய்யும் வேலையை ஆரம்பித்தான். மகன் வேலை செய்வதை கவனித்த வேலன் முத்துவிடம் சென்று 'முத்து என்ன செய்கிறாய்?" என்று கேட்க, முத்து 'நான் மரத்தட்டு ஒன்றை உருவாக்குகிறேன்" என்று பதிலளித்தான். 

       இதைக் கேட்ட வேலன் 'மரத்தட்டா? எதற்காக?" என்று கேட்க, முத்து உடனே 'நான் உங்களுக்காக தான் செய்கிறேன் அப்பா, நீங்கள் தாத்தாவை போல் வயதான பிறகு, உணவு சாப்பிட உங்களுக்கு ஒரு தட்டு வேண்டும், மண்ணால் ஆன தட்டு எளிதில் உடைந்து விடும். அப்போது நான் உங்களை கடுமையாக திட்டிவிடுவேன். மண் தட்டுக்கு பதிலாக உங்களுக்கு மரத்தட்டு ஒன்றை கொடுத்துவிட்டால், அது எளிதில் உடையவும் உடையாது, நான் உங்களை திட்டவும் மாட்டேன் என்று பதிலளித்தான். 

      இதைக் கேட்ட தச்சர் மிகவும் அதிர்ச்சியடைந்து, தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டான். அன்றைய நாளிலிருந்து வேலன் தனது தந்தையை மிகவும் மரியாதையுடன் நடத்தினான்.

நீதி : உங்களுடைய பெற்றோரை எப்பொழுதும் மதிக்க வேண்டும். அது உங்களுடைய கடமை.

Pages