மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 21 December 2018

இரவில் கேட்கும் இன்னிசை... அதிசய கிராமம்!!

6 மணிக்கு மேல் செயல்படாமல் போகும் கண், காது - நம்பமுடியாத அதிசய கோவில்!!
     பகவான் கிருஷ்ணரின் குறும்பைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. குறும்பு செய்யும் குழந்தையாக வெண்ணை திருடி தின்று மாட்டியதும் வாயில் உலகத்தைக் காட்டியவர், இன்றும் இந்த ஊருக்கு வருகை தருகிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா! இந்த ஊர் மக்கள் அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.


    கிருஷ்ணர் குழல் ஊதுவதில் மிகத்திறமைசாலியாவார். அவர் இசையில் மெய் மயங்காதவர் யாருமிலர் என்றுகூட சொல்லலாம்.

       கிருஷ்ணர் பிறந்தது மதுராவில் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது வெறும் வரலாற்று நகரம் மட்டுமல்ல. இங்கு பல ஆன்மீக அமானுஷ்ய நம்பிக்கைகளும் நிரம்பி காணப்படுகின்றன.

   ராச லீலா பல புராணங்களை விவரிக்கும் நிகழ்வாக நடக்கும். கிருஷ்ணர் குழல் ஊதுவதில் மட்டுமல்ல நடனத்திலும் சிறந்தவராவார்.

 கிருஷ்ணர் புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்ததும் பிருந்தாவனமே அதிரும் அளவுக்கு ஆரவாரம் இருக்கும். கிருஷ்ணரின் இசையில் மெய்மறக்கும் போது ஒரு நிசப்தம் அனைவரையும் ஆட்கொண்டுவிடும்.

    இந்த கிராமத்திற்கு ஒவ்வொரு நாளும் இரவு கிருஷ்ணரின் குழலோசை கேட்குமாம். பொழுது சாய்ந்து இருட்டிய பிறகு யாரையும் அறியாமல் அனைவருக்கும் புல்லாங்குழல் இசை கேட்கிறதாம்.

 ஆனால், இந்த புல்லாங்குழல் இசையை ஒலிப்பதிவு செய்யமுடியவில்லை என்கிறார்கள் கிராமத்தினர். இங்குள்ள மரங்கள் வேரை மேல்நோக்கி வளரச் செய்கிறது. அதுவும் அதன் கிளைகள் கீழ்நோக்கி வளருகிறது.

     நிதிவன் கிராமத்திலே ராதாராணி கோவில் ஒன்றுள்ளது. இங்குதான் ராதா இருப்பார் என்றும் அவரை கவரவே கிருஷ்ணர் குழல் ஊதுகிறார் என்றும் நம்பப்படுகிறது.

 அமைதியான சூழலில் அமைந்துள்ள கோவில் மாலை 5 மணிக்கெல்லாம் மூடப்படும். இங்கிருந்து கிருஷ்ணரும் ராதையும் காட்டுக்குள் ராச லீலாவுக்காக செல்வார்கள் என்கிறார்கள்.

     சூரிய மறைவுக்குப்பிறகு இந்த கோவிலில் யாரேனும் இருந்தால் கண், காது இவற்றில் ஒன்று செயல்படாமல் போய்விடும் என்றும் நம்பப்படுகிறது.

      அதனாலே கிருஷ்ணனை மாயோன் என்றும் கூறுவர். அந்த மாய கிருஷ்ணனின் லீலைகள் பல. 

Pages