மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 3 December 2018

இப்படித்தான் பலமுறை நடக்கிறது...

Husband Reply to Wife..!!
       Once a married couple moved to a new home. Next morning, just after waking up wife looked through window and saw that a women in neighboring home was hanging out washed linen clothes to dry.

      After wife saw this she said to her husband, ′Dear, look at those dirty clothes that women is hanging there to dry.′

Husband didn′t paid attention and continued to read his newspaper.

     For few days, whenever wife saw that neighboring women dry clothes, she would be surprised by how dirty it was. One day she said, We ought to teach her how to wash clothes.

  Still Husband didn′t say anything about it.

       One morning when she woke up and looked through the window. She screamed with surprise look on her face and said, Oh!! Today cloths seems so clean. Probably that neighboring women learned to wash it at last..

′Today I just woke up bit earlier and washed up our window..′ replied husband.

     ஓர் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை எழுந்து ஜன்னல் வழியே மனைவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

     இதை பார்த்துக் கொண்டிருந்த மனைவி சொன்னாள், அந்த அம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை.

      கணவன் மனைவி சொல்வதில் கவனம் செலுத்தாமல் செய்தித்தாளை தொடர்ந்து படித்தான்.

    சில நாட்களாக, பக்கத்து வீட்டுப் பெண்மணி துணி துவைப்பதை பார்க்கும் போது, அந்தத் துணி அழுக்காக இருப்பதை பார்த்து மிகவும் ஆச்சரியப்படுவாள். ஒரு நாள் தன் கணவனிடம் 'அந்த பெண்மணிக்கு துணிகளை எப்படி துவைக்க வேண்டும் என்பதை கற்பிக்க வேண்டும்" என்று கூறினாள். கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

      திடீரென்று ஒரு நாள் படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலை பார்த்த போது, பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள், அப்பாடா, இப்போது அந்த அம்மா துணி துவைக்க எப்படியோ கற்றுக் கொண்டாள் என்று கூறினாள். இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..!!! என்றாள்.

     கணவன் அதற்கு, இன்று நான் சிறிது முன்னதாக படுக்கையிலிருந்து எழுந்து நம் வீட்டு ஜன்னலை துடைத்தேன்.. என்று பதிலளித்தான்.

Pages