இந்திய எரிசக்தி சேமிப்பு தினம்
🌲 எரிபொருள் பயன்படாத துறையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாக பெட்ரோலியம் மற்றும் நிலக்கரியின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கிறது.
🌲 இன்னும் சிறிது நாட்களில் இந்த எரிபொருட்கள் இந்தப் பூமியில் தீர்ந்து போய் நமக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது. எனவே, நிலைமையை சமாளிக்க எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
🌲 அதனால், எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் 14ஆம் தேதியும், எரிசக்தி சேமிப்பு வாரம் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி வரையும் அனுசரிக்கப்படுகின்றன.