செய்முறை:
இடது கை: கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு- சின் முத்திரை. மற்ற விரல்கள் நேராக சேர்ந்து இருக்கட்டும்.
வலது கை: சுண்டுவிரல் மற்றும் நடுவிரல் நுனிகளைக் கட்டை விரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும்.இதே முறையில் இந்த முத்திரையை 15 முதல் 20 நிமிடங்கள் காலையிலும் மாலையிலும் பயிற்சி செய்ய வேண்டும்.
பலன்கள்:முதுகு வலி நரம்புக் கோளாறுகள் குறையும்