மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 1 December 2018

முதலை செல்லங்கள்!__உங்களுக்கு தெரியுமா?

தப்பித் தவறி, முதலையை காண நேர்ந்தால், தலைதெறிக்க ஓடுவோம். ஆனால், முதலைகளுடன், நட்பு பாராட்டி வருகின்றனர்,
ஒரு கிராம மக்கள். வியப்பாக இருக்கிறதா... மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள, பர்க்கினோ பாசோ என்ற நாட்டில், போசேல் கிராமத்தில் இப்படி நடக்கிறது. முதலைகளை குழந்தை போல நேசிக்கின்றனர். 
'நீண்ட காலமாக முதலைகள் இங்கு உள்ளன. நான், சிறுவனாக இருந்த போதே பார்த்திருக்கிறேன். ஆற்றில் நீச்சல் பயிலும் போது, முதலைகளும் நீந்திக் கொண்டிருந்தன... அவற்றுடன் பழக கற்று கொண்டோம். 
முதலை முதுகில், ஏறி அமரலாம்; படுத்துக் கொள்ளலாம். அவை, புனிதமானவை; தீங்கு எதுவும் செய்யாது' என்கிறார், அக்கிராமத்தை சேர்ந்த, 85 வயது பியர்ரே கபோரே. 
'முதலைகளுடன், 15ம் நூற்றாண்டு முதல் நட்புறவு ஏற்பட்டது. கிராமத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு, தண்ணீர் இன்றி தவித்த போது, இந்த ஆற்றில் நீர் இருப்பதை, முதலைகள் தான் உணர்த்தின...' என, வழி வழியாக வந்த கதையை, ஒரு முதியவர் கூறினார்.
முதலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும், 'கூம் லாக்ரே' என்ற விழாவை நடத்துகின்றனர். அன்று அவற்றுக்கு, பிடித்த உணவுகளை வழங்கி, ஆசி பெறுகின்றனர்.
கிராமத்தில், அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்றால், முதலைகள், ஆர்ப்பாட்டம் செய்து, எச்சரிக்குமாம். பிரியத்துக்குரிய முதலைகளில், ஒன்று இறந்து விட்டால், முறையாக இறுதி சடங்கு, செய்கின்றனர், கிராம மக்கள். 
மனிதன் - விலங்கு இடையே மலைப்பூட்டும் பந்தம்.

Pages