ஒரு சமயம் வெளிக்காட்டிலிருந்து குரங்கார் ஒருவர் நமது அரசரை காண வந்தார். நம் காட்டில் அப்போது ஏழுவகையான பாதுகாப்பு படைகள் காட்டைச் சுற்றி இருந்தன.
முதல் படையை கடந்து உள்ளே வரும்போது அதன் தலைவர் அரசரிடம் பெற்றுக் கொண்டு வரும் சன்மானத்தில் பாதி தனக்கு தருவதாக இருந்தால் தான் உள்ளே அனுமதிப்பேன் என்று கூற அதை ஒப்புக் கொண்டது குரங்கு.
அடுத்த படைத் தலைவரிடம் சென்று அரசரை காண வேண்டும் என அனுமதி கேட்க அவரும் முன்னவர் போன்றே நிபந்தனை விதித்தார். அதே போன்றே மீதமுள்ள ஐந்து படைத் தலைவர்களும் நிபந்தனை விதித்து குரங்காரை மன்னரை பார்க்க அனுமதி அளித்தனர்.
மன்னரைக் கண்ட குரங்கார் நிறைய வெகுமதிகளாக வாழைப்பழங்களை பெற்றுக் கொண்டு ஒவ்வொரு படைத் தலைவரிடம் தாம் ஒப்புக் கொண்டவாறே இருந்தததில் பாதிப் பழங்களை தந்து விட்டு எழுவரையும் கடந்து வெளியே வந்து பார்த்தால் குரங்காருக்கு மிஞ்சியதோ ஒரே ஒரு வாழைப் பழம் தான் என்றால் குரங்கார் பெற்ற பழங்கள் எத்தனை என்பதுதான் அடுத்த புதிர்.
விடையை யோசித்து பத்து நிமிடங்களுக்குள் சொல்லுங்கள்” என நரி கூறியது.