அன்னாச்சாமியின் தாத்தாவிற்கு மூன்று பிள்ளைகள். அவர்கள் மூவரும் ஒவ்வொரு பிள்ளைகளை வைத்திருந்தனர். தாத்தா சில கொட்டைகளை கொண்டு வந்தார்.
முதலாவது மகன் இந்த கொட்டைகளை கண்டான். தன் மகனுக்கு ஒன்றை தின்ன கொடுத்துவிட்டு மீதியை 3 பங்காக்கி ஒரு பங்கை தனக்கு எடுத்து சென்று விட்டான்.
பின்னர் மற்றொரு மகன் வந்தான் கொட்டைகள் இருப்பதை கண்டது தானும் தன் மகனுக்கு ஒன்றை கையில் கொடுத்துவிட்டு மீதி இருப்பதை 3 பங்காக்கி ஒரு பங்கை தனக்கு எடுத்து சென்று விட்டான்.
பிறகு வந்த அன்னாச்சாமியின் தந்தையும் தன் மகன் அன்னாச்சாமிக்கு ஒன்றை தந்து விட்டு மீதமுள்ள கொட்டைகளை 3 பங்காக்கி 1 பங்கை எடுத்துச் சென்றுவிட்டார்.
“அன்னாச்சாமியின் தாத்தா வீடு வந்து பார்த்தால் மீதம் 6 கொட்டைகள் மட்டுமே இருந்தன என்றால் ...
அணில் தாத்தா கொண்டுவந்த மொத்த கொட்டைகள் எத்தனை?