மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 4 December 2018

மற்றவர்களிடம் குறை காணாதீர்கள்.

A Farmer and His Wife..!


       A farmer said to his wife, ′You are lazy. You work slowly and lethargically. You waste your time.′ The wife was angry at the words of her husband.

      She said to her husband, ′You are wrong. Stay at home tomorrow. I will go to field. I will do your work there. Will you do my works at home here?′

The farmer said happily, ′Very well, I will do your works at home.′

      The wife said, ′Milk the cow. Feed the pigs. Clean the utensils. Take care of our hen and Spin the yarn.′ After instructing all these, woman went to the field next day. The farmer took a vessel and went to the cow to milk it. When he tried to milk the cow, it gave a good kick. He then went to the pig-sty. He hit his head against the beam. He went to feed the hen. He forgot to spin.

     The wife returned from the field when it turned evening. The farmer couldn′t speak nothing. Thereafter he didn′t find fault with his wife. They lived happily together for a long time.

Moral : Do not find fault with others.

       விவசாயி ஒருவர் தன் மனைவியிடம், 'நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய், ஈடுபாடின்றி வேலை செய்கிறாய், உன்னுடைய நேரத்தை வீணடிக்கிறாய்" என்றான். மனைவி தன் கணவனின் வார்த்தைகளை கேட்டு மிகவும் கோபமடைந்தாள்.

      மனைவி கணவனிடம், நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. சரி நாளை நீங்கள் வீட்டில் இருந்துக் கொள்ளுங்கள். நான் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள வேலையை செய்கிறேன். நீங்கள் வீட்டில் என்னுடைய வேலையை செய்வீர்களா? என்று கேட்டாள்.

     கணவனும் மகிழ்ச்சியாக 'மிக்க நன்று, நான் உன்னுடைய வீட்டு வேலையை செய்கிறேன் என்றான்."

     அதற்கு மனைவி பால் கறந்திடுங்கள், பன்றிகளுக்கு உணவளித்து விடுங்கள், பாத்திரங்களை கழுவி விடுங்கள், கோழிகளை கவனித்துக் கொள்ளுங்கள், பிறகு நூலிழையை சுழற்றி வையுங்கள் என்று கூறிவிட்டு அடுத்த நாள் தோட்டத்திற்கு சென்றுவிட்டாள். விவசாயி ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பால் கறக்க சென்றான், பால் கறக்க முயலும் போது மாடு எட்டி உதைத்தது. அதற்கு பிறகு, பன்றி கூண்டுக்கு சென்றான். அங்கு உத்திரத்தில் தன் தலையை இடித்துக் கொண்டான். பிறகு கோழிகளுக்கு உணவளித்தான், ஆனால் நூலிழையை சுழற்ற மறந்துவிட்டான்.

      மாலையில் மனைவி தோட்டத்திலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்தாள். கணவனால் எதுவும் பேசமுடியவில்லை. அதற்கு பிறகு கணவன் மனைவியிடம் எந்த குறையையும் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் சந்தோஷமாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.

நீதி : மற்றவர்களிடம் குறை காணாதீர்கள்.

Pages