Hunting With The Lion ...!!
It was a dry summer. The animals in the forest were difficult to find their food in the beginning stage.
A bear, a wolf and a jackal thought it would be better to join hands with a lion and do the hunting. They approached lion and he too agreed. The four of them went for an hunting.
They all saw an buffallo being alone and planned to kill it. The fox and jackal chased the buffalo first. The bear intercepted the buffalo. The lion killed the buffallo.
The fox made shares out of the buffalo. When they were about to take their shares the lion roared and said, ′Well friends, the first share is mine for my leadership. The second share is mine for, Because I killed it. The third share is also mine for I need it for my cubs. Anyone who needs a share can take the fourth. But before that you will have to win me.′
All the three left the place without a single word.
Moral : If you are might, you are right.
அது ஒரு வறண்ட கோடைக்காலம். காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் உணவிற்கு மிகவும் கஷ்டப்பட்டன.
கரடி, நரி மற்றும் குள்ளநரி இவை மூன்றும் சிங்கத்துடன் வேட்டைக்கு சேர்ந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தன. அவைகள் சிங்கத்தை அணுகியது, அந்த சிங்கமும் அதற்கு ஒப்புக்கொண்டது. இவை நான்கும் வேட்டைக்கு கிளம்பின.
இவை மூன்றும் எருமை ஒன்று தனியாக இருப்பதை கண்டு அதை கொல்ல திட்டமிட்டது. நரியும், குள்ளநரியும் முதலில் எருமையை துறத்தத் தொடங்கின. கரடி எருமையை இடைமறித்து நின்றது. சிங்கம் அதை கொன்றுவிட்டது.
நரி எருமையை பங்கு போட்டது. அவை மூன்றும் அதன் பங்குகளை எடுத்த போது சிங்கம் கர்ஜித்து கூறியது, ′நண்பர்களே, முதல் பங்கு என்னுடையது ஏனென்றால் அது என் தலைமைப் பதவிக்குரியதாகும். இரண்டாவது பங்கும் எனக்குதான் ஏனென்றால் நான் தான் எருமையை கொன்றேன். மூன்றாவது பங்கும் எனக்குதான் ஏனென்றால் அது என் குட்டிகளுக்கு தேவை. யாருக்காவது நான்காவது பங்கு வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் அதற்கு முன்னால் நீங்கள் என்னை வெல்ல வேண்டும்.′ என்றது அந்த சிங்கம்.
அவை மூன்றும் ஒரு வார்த்தையும் பேசாமல் அந்த இடத்திலிருந்து வெளியேறின.
நீதி : நீங்கள் வலிமை உடையவராக இருந்தால், நீங்கள் சொல்வது சரிதான் என்று எண்ணிக் கொள்வார்கள்.