மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 15 December 2018

மற்றவர்களின் நம்பிக்கையை பெறுவது எப்படி?

       மற்றவர்களின் நம்பிக்கையை பெறுவது எளிதானது அல்ல; ஒரே நாளில் அடையும் காரியமும் அல்ல. மிகவும் கவனமாக பயிற்சி மேற்கொண்டால், நம்பிக்கை நாயகராக மாறி விடலாம்.


பிறரிடம் நம்பிக்கை பெற சில வழிமுறைகள்...
* உண்மையுடன் செயல்படுங்கள்.
* உரிய மரியாதையைக் கொடுங்கள்.
* வெற்றி பெறும் உணர்வோடு பழகுங்கள்.
* மற்றவர் விருப்பம் அறிந்து செயல்படுங்கள்.
* ஒளிவு மறைவின்றி, திறந்த மனதோடு பழகுங்கள்.
* நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிறர் நலம் விசாரியுங்கள்.
* பொறுப்பு ஏற்கும் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* பொது நலனுடன் செயல்படுங்கள்
* எல்லாரும் அணுகும் விதமாக, எளிமையாக வாழுங்கள்.
* தன்னம்பிக்கையுடன் இருங்கள்.
* தெரியாதவற்றை, தெரிந்ததாக காட்டிக் கொள்ளாதிருங்கள்.
* வாக்கு கொடுத்து விட்டால், கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.
* தேவை அறிந்து, வேண்டிய தகவல்களை வழங்குங்கள்.
* யாரிடம் பேசுகிறோம் என்பதை, உணர்ந்து, ஏற்றபடி பேசுங்கள்.
* வாய்ப்புகளை, தவறாகப் பயன்படுத்தாதீர்.
* மற்றவர் பெயர்களை, நினைவில் வைத்திருங்கள்.
* ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
* ரகசியத்தை காப்பாற்றுங்கள்.
* பொய் பேசுவதை தவிருங்கள்.
* மற்றவர்களையும், உங்களையும் நம்புங்கள்..
இந்த வழிமுறைகளை, தினமும் பயிற்சி செய்தால், நம்பிக்கை நட்சத்திரமாக மாறி விடலாம்.

Pages