மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 14 December 2018

டோடோ பறவையின் சோகக்கதையைக் கேட்கிறீர்களா?



    டோடோ அல்லது டூடூ என்றழைக்கப்படும் இப்பறவைகள் மொரீஷியஸ் தீவில் மனித நடமாட்டம் இன்றி இருந்த நாட்களில் மிக அதிக அளவில் வாழ்ந்த ஒரு பறவை இனம் ஆகும். சுமார் மூன்றடி உயரமும் 20 முதல் 25 கிலோ வரையான எடையும் கொண்ட இப் பறவை புறா இனத்தைச் சேர்ந்து.


   இறக்கையென ஒரு உறுப்பு இருந்தும் பறக்க முடியாத பறவை இது. ஒரு காலத்தில் இந்தப் பறவைக்கு எதிரிகள் யாரும் இருக்கவில்லை. பெருமளவில் வாழ்ந்துவந்த இதன் மாமிசம் உண்ண லாயக்கற்றதாக இருந்ததாம். ஆனாலும் மொரீஷியஸ் வழியே கப்பல்களில் சென்ற மாலுமிகள் அதன் சுருள் சுருளான சிறகுகளுக்காக அவற்றை ஒரு தடி கொண்டு அடித்துக் கொன்றனராம். 

    தன்னை அடிக்க வருகிறானே என்று அந்தப் பறவையும் ஓடித் தப்பிக்காது. அருகில் நின்றிருக்கும் மற்றப் பறவைகளும் ஓடித் தப்பிக்காமல் அசடுபோல் அங்கேயே நின்று கொண்டு வேடிக்கை பார்த்திருக்கும். அடுத்து அதன் உயிர் போகும் என்பது தெரியாது அதற்கு. அதனால்தான் அசடுபோல மந்தமாக இருக்ப்பவர்களுக்கு டோடோ பறவையின் பெயரை வைத்து அழைப்பார்கள். 

    பின் நாட்களில் மக்கள் அத்தீவில் குடியேறிய போது அவர்களுடன் வந்த பூனை, நாய் போன்ற மிருகங்கள் எஞ்சி இருந்த டோடோக்களை முற்றிலுமாக அழித்தன. 

    டோடோவின் மறைவு, இத்தீவின் உயிரினங்கள் மனிதரால் எவ்வாறு சீரழிக்கப்பட்டன என்பதைக் காட்டுகின்றது. 

    இவை அழிந்தபோது அங்கு இருந்த கல்வாரியா மரங்களும பெருமளவில் அழிய ஆரம்பித்தன. இவை அழியும்போது இந்த மரங்களும் ஏன் அழிய வேண்டும். காரணம் இருந்தது. 

அக்காரணம்..... 
    டோடோ பறவை இனம் அழிந்தவுடன் "கல்வாரியா" எனப்படும் மரமும் அழிய ஆரம்பித்தது..! மரங்கள் அழிவுக்கு காரணம் என்னவென்று பார்த்த போதுதான் ஒரு உண்மை தெரிந்தது டோடோ பறவை கல்வாரியா மரத்தின் பழங்களை விரும்பி உண்ணக் கூடியவை. அவ்வாறு உண்டு, தன் வயிற்றில் செரித்து வெளியேறும் கழிவுகளில் கலந்து விழும் விதைகள் மட்டுமே அந்த மரத்தை முளைக்க வைக்கும் தன்மை கொண்டது.. 

     மனித மண்டையோட்டைப் போல் கடினமான உறையுடைய விதைகளைக் கொண்ட இந்த மரத்தின் பழங்களை டோடோ தின்றுவிட்டு கொட்டைகளைத் துப்புவது வழக்கம். டோடோக்களின் வயிற்றினுள் புகுந்து வந்த கல்வாரியா விதைகள் மட்டுமே முளைக்கும்திறன் பெற்றவையாக இருந்தது. வேறு எந்த விதத்திலும் அந்த விதையை முளைக்க வைக்க முடியவில்லை..! 


   இப்படியொரு ஆச்சரிய உறவு பறவைக்கும், மரத்திற்கும் இருந்திருக்கிறது.

     பிற்காலத்தில் வான்கோழிகளுக்கு இம்மரப் பழங்களைச் சாப்பிட கொடுத்த போது, அதன் விதைகளில் சில முளைப்புத் திறனைப் திரும்பப் பெற்றன. அதனால் இப்போது அம்மரங்கள் டோடோ மரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

     100 ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக அந்த இனமே அழிக்கப்பட்டது! கடைசி பறவையும் 1681 இல் இறந்தது..!! 

    இன்று உலகிலேயே இரண்டு பதப்படுத்தப்பட்ட டோடோ பறவைகள்தான் உண்டு. ஒன்று மொரிஷியஸின் தலைநகரிலுள்ள அருங்காட்சியகத்தில். இரண்டாவது நியூயார்க் இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியத்திலுள்ளது. 

    இரண்டுமே ஏற்கனவே கிடைத்த எலும்புக்கூகளை வைத்து உருவாக்கியது. எல்லா எலும்புகளும் கிடைத்திருந்தாலும், டோடோவின் நிறம் என்ன, இறகுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது பற்றிய குறிப்பேதும் இல்லாமல் அருங்காட்சியகத்தினர் திண்டாடிக் கொண்டிருந்போது சற்றும் எதிர்பாராத இடமொன்றிலிருந்து செய்தி ஒன்று வந்தது, லெனின்கிராடிலிருந்து, அங்குள்ள உலகப்புகழ்பெற்ற ஹெர்மிடாஷ் எனும் அருங்காட்சியத்திலுள்ள மொகலாய சிற்றோவியம் ஒன்றில் டோடோ பறவை தீட்டப்பட்டுள்ளது. இது சாம்பல் நிறப் பறவை என்பது தெரிய வந்தது. 

    இந்திய சிற்றோவியம் ஒன்றில் இப்பறவை இடம்பெற்றது எப்படி? மொகலாய மன்னர் ஒருவருக்கு பிரஞ்சு அதிகாரி அல்லது வணிகர் ஒருவரால் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு டோடோ பறவை மொகலாய சக்ரவர்த்தியின் பூங்காவில் விடப்பட்டிருந்தது. அதை ஒரு ஓவியர் வரைய, அவ்வோவியம் ரஷ்யா போய்ச் சேர்ந்துவிட்டது. இந்த ஓவியத்தின் அடிப்படையில்தான் இரண்டு டோடோ பறவைகள் மீள் உருவாக்கம் செய்யப்பட்டன

Pages