காட்டில் வாழும் குரங்கார் குப்புசாமி தனது உறவினர்கள் வந்திருந்ததால் நல்ல வாழைப்பழங்களைக் கொண்டு சென்றார். கொண்டு சென்ற வாழைப்பழங்களை ஒவ்வொருவருக்கும் இரண்டு பழங்கள் வீதம் பங்கிடலாம் என நினைத்து எண்ணிப் பார்த்தார். இன்னும் ஆறு பழங்கள் மீதி இருந்தன.
மூன்று பழங்கள் வீதம் பங்கிடலாம் என நினைத்து எண்ணிப் பார்த்தார். இன்னும் ஆறு பழங்கள் தேவைப்பட்டன.அப்படியானால் அவர் கொண்டு வந்த பழங்கள் எத்தனை? அவரது உறவினர்கள் எத்தனை பேர்?