காமராஜர் என்று பெயர் வந்ததே ஒரு சுவையான நிகழ்வு. காமராஜர் குழந்தையாக இருந்தபோது அவரது பாட்டி தேவி மீனாட்சியின் மீது கொண்டிருந்த இறைபக்தியின் காரணமாக ‘காமாட்சி’ என்றே அழைத்தார். ஆனால் அவரது தாய் சிவகாமி அம்மாள் ‘ராஜா’ என்றே அழைத்தார். அப்பா குமாரசாமி பார்த்தார். இரண்டு பெயர்களையும் சேர்த்து அதாவது காமாட்சியில் உள்ள இரண்டு எழுத்தையும் ‘ராஜா’வையும் ஒன்று சேர்த்து ‘காமராஜர்’ என்று ஆக்கிவிட்டார்.
சிவகாசியில் பள்ளி ஒன்றின் ஆண்டு விழா. மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்க ஏற்பாடாகி இருந்தது. காமராஜர் பேனாவை பரிசாக வழங்கும் போது பேனாவை திறந்து பார்த்தார். அந்த பேனாவில் ‘நிப்’ இல்லாமல் இருந்தது. உடனே “ஏம்பா! என்ன” என்று கேட்டார். பரபரப்புடன் அருகே நின்றவர்கள் பார்த்தார்கள். பேனாவில் ‘நிப்’ இல்லை. ‘பாவம் சின்னப் புள்ளைங்க, பரிசுன்னு பேனா வாங்கிட்டுப் போனா நிப்பு இல்லாம இருக்கப் போகுது! முதலில் பேனாக்களை சரிபாருங்கள்’ என்று கூறியிருக்கிறார். எவ்வளவு பெரிய தலைவர் சின்ன விஷயங் களில் கூட கவனமாக இருந்திருக்கிறார்!