மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday, 18 December 2018

பிராணிகளிடத்தில் அன்பு!


         ஒரு மருத்துவமனைக்கு ஒடோடி வந்தான் ஒரு சிறுவன். டாக்டரை வற்புறுத்தி வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு போனான். கையில் மருந்துப் பையுடன் கிளம்பினார் டாக்டர். தெருவோரம் ஒரு நாய் காயப்பட்டுத் துடிததுக் கொண்டிருந்தது. அதை மருத்தவரிடம் காட்டி, வைத்தியம் செய்யச் சொன்னான்.

       டாக்டருக்கு கோபமாக வந்தது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. "இதற்காகவா என்ன இவ்வளவு வற்புறுத்தி அழைத்து வந்தாய்?...எனக்கு வேலையே இல்லை என்று நினைத்தாயா?...'' 

       சிறுவன் தான் பிடித்த பிடியை விடுவதாக இல்லை....டாக்டரைப் பார்த்து, "மனிதர்களைப் போல நாய்க்கும் வேதனை இருக்கத்தான் இருக்கும்!.... மனிதர்களின் வேதனையைத்தான் போக்குவேன்.... மற்ற பிராணிகளின் வேதனையைப் போக்க மாட்டேன் எனக் கூறுவது சரியா?....'' என்று கேட்டான் சிறுவன். 

     சிறுவன் கேட்ட கேள்வியில் அசந்து போனார் டாக்டர். உடனே அந்த நாய்க்கு மருந்து போட்டார். சில நாட்களில் அந்த நாயும் குணமடைந்து விட்டது!

      உயிர்களிடத்தில் அன்பு கொண்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் "பண்டிட் மதன் மோகன் மாளவியா' என்று அழைக்கப்பட்டவர்!

Pages