மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 1 December 2018

தமிழ் பொன்மொழிகள்

1. நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்


2. பிரார்த்தனை என்பது கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல. அது ஆன்மாவின் ஏக்கமாகும்.


3. நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
   நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
   நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
   நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
        - ஆப்ரகாம் லிங்கன்.


4. முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;
    உலகம் உன்னை விழுங்கி விடும்.
    -பாரசீகம்


5.  தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது
  -ஹென்றி போர்டு


6. எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
    -இங்கிலாந்து.


7. உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.
-யேசுநாதர்.


8. ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும் குதிரையை பின்னால் இருந்தும் முட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்க வேண்டாம்.


9. அப்பன் தெய்வம், அம்மை தேசம் தந்தை தான் தெய்வம், தாய் தான் நாடு


10. எவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.


11. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.


12. அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.


13. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.


14. வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிக‌ப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.

Pages